சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸுக்கு 31 வயது ஆகிறது. இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையில் இன்று நடைபெறவுள்ள ஒரு நாள் ஆட்டமே பென் ஸ்டோக்ஸுக்கு கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியாகும்.பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தனது ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “இங்கிலாந்து அணிக்காக எனது கடைசி ஒரு நாள் போட்டியை எனது சொந்த ஊரான டர்ஹம் மைதானத்தில் இன்று விளையாடுகிறேன். அதன் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.என அவர் அறிவித்துள்ளார்.
Tags :