84வது கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி வெற்றி

by Editor / 02-12-2023 09:38:51am
84வது கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி வெற்றி

பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி வெற்றி வாகை சூடியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்திய அளவில் 3வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 84வது கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வைஷாலி வெற்றி

Share via

More stories