ED யின் லட்சணம் பாரீர்!"-சி.பி.எம். மாநில செயலாளர்-கே.பாலகிருஷ்ணன்அறிக்கை
சி.பி.எம். மாநில செயலாளர்-கே.பாலகிருஷ்ணன், விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், மதுரையில் ₹20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ₹31 லட்சம் லஞ்சமாக வாங்கிய அந்த அதிகாரி, அடுத்த தவணையாக ₹20 லட்சம் பெறும்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதுபோல வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கெல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு செய்துள்ளனர். இது அவசியமான நடவடிக்கை. சில நாட்கள் முன்புதான் ராஜஸ்தானில் இதே போல ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாநில அதிகாரிகளிடம் மாட்டினார்.இவ்வாறு -கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநில செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags : சி.பி.எம். மாநில செயலாளர்-கே.பாலகிருஷ்ணன், அறிக்கை