மோடியின் எந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பே இல்லை- சிபிஐஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்
மயிலாடுதுறையில் சிபிஐஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.:
பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைத்தாலும், தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணிக்கு கையேந்தும் நிலையை மக்கள் உருவாக்கியுள்ளனர்.
ஒரே மையத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகள் தான் தீர்மானிக்க வேண்டும். தொடர்ந்து சர்ச்சைகள் நீடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
ஒரு நாடு ஒரே தேர்தல், எம்.பி.க்கள் அதிகப்படுத்துதல் போன்ற மோடியின் எந்த திட்டமும் நிறைவேற வாய்ப்பே இல்லை.
கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
சந்திரபாபு நாயுடு கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் மோடி இணைத்தார். இந்த தேர்தல் ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்ப்பதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த கூட்டணி எத்தனை நாள் நீடிக்கும் என்பதை பார்ப்போம். பாஜக கூட்டணி நீடிக்காது.என்றார்.
Tags : சிபிஐஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்