கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் - ஓபிஎஸ் அறிவிப்பு

by Staff / 07-04-2023 01:54:43pm
கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் - ஓபிஎஸ் அறிவிப்பு

அரசியல் மாயையில் அதிமுக சிக்கியுள்ளது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக பிளவு பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கில் தங்களது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றோம். அதிமுக பிளவு ஏற்பட்டபோது மக்கள் தான் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர். இனி எடப்பாடி பழனிசாமி தரப்பு பற்றி எதுவும் பேச மாட்டோம் என்றார். தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்; இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றார்.

 

Tags :

Share via