பாஜகவில் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்

by Staff / 07-04-2023 01:56:29pm
பாஜகவில் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்

ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த காங்கிரஸை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கிரண்குமார் ரெட்டி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார், மேலும் மக்களின் தீர்ப்பை ஏற்கவும், போக்கைத் திருத்தவும் காங்கிரஸ் தலைமையை கடுமையாக சாடினார். அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவிழந்து வருகிறது, அந்த உயர்மட்டக்குழு மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில்லை. தங்களின் கருத்தை கேட்க முன்வருவதில்லை என்றும் சாடினார்.

 

Tags :

Share via

More stories