திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ண இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டம்

by Editor / 24-10-2021 07:55:34pm
திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ண இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டம்

வங்கதேச வன்முறையை கண்டித்து திருச்செந்தூரில் ஹரே கிருஷ்ண இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்து மக்களின் மீதான தாக்குதல் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கோயிலை சூறையாடிய சமூக விரோதிகளை கண்டித்து உலகம் தழுவிய அனைத்து நாடுகளிலும் உள்ள ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் அக்டோபர் 23 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூரில் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அக்டோபர் 23 ந் தேதியன்று மாலை 5 முதல் 5.30 மணி வரைஹரே கிருஷ்ண அறக்கட்டளை சார்பில் ஹரி நாம சங்கீர்த்தனம் மூலமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.. வங்கதேச இந்து மக்களின் மீதான தாக்குதலில் கொலை செய்யப்பட்ட ஹரே கிருஷ்ண பிரம்மச்சாரி பக்தர்களின் ஆத்மா பகவானைச் சென்றடைய பிரார்த்தித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo