நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்திட மாட்டேன்

by Staff / 12-08-2023 01:59:48pm
நீட் விலக்கு மசோதாவுக்கு நான் கையெழுத்திட மாட்டேன்

கடந்த நீட் தேர்வில் 720க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ, மாணவியர்களோடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார். அந்த விழாவில் கலந்துகொண்ட ஒரு மாணவரின் பெற்றோர் ஒருவர், தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது கையெழுத்திடுவீர்கள் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நீட் விலக்கு மசோதாவுக்கு நான் ஒரு போதும் கையெழுதிடமாட்டேன். நீட் வந்த பிறகு தான் ஏழை மாணவர்களும் எளிதாக மருத்துவம் படிக்கும் சூழல் உருவாகி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo