ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பாதுகாப்பானவை என அந்த நிறுவனம் உறுதி

விமான பாதுகாப்பு தொடர்பாக தினசரி 30 சம்பவங்கள் நிகழ்ந்தாலும் பயணிகளின் பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பருவநிலை இயந்திர கோளாறு பறவை மோதல் பயணிகளுடன் நடுவானில் வட்டம் அடித்தல் போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகள் விமான பயணிகள் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய் சிங் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் 15 ஆண்டுகளாக பாதுகாப்பான பயணத்தை அளித்து வருவதாகவும் விமானத்தின் மீது பறவை மோதியது எந்தவொரு விமானத்துக்கும் ஏற்படக்கூடியது தான் என்பதால் மிக படுத்த வேண்டாம் என்றும் கூறினார்.
Tags :