விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம்...
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே தொங்கு பாலம்... பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்..நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தொங்கு பாலம் அமைக்க உள்ளதாக தெரிவித்தார். தனிமனித பொருளாதரம் முன்னேற நெடுஞ்சாலைகள் மிகமுக்கியமாக திகழ்கிறது என்றும் நெடுஞ்சாலை துறைகளின் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து மாவட்ட வருவாய் அலுவலர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் தனி நடை பாதை அமைக்கும் கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் எ.வ.வேலு கூறினார்.இதனிடையே ஒசூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் பேசிய அவர் 10 ஆண்டுகளாக முன்னேற்றம் அடையாத தகவல் தொழில்நுட்ப பூங்காவை முழுபயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் ஒசூர் தொழில்நுட்ப பூங்கா வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.முன்னதாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு ஜெயலலிதா பல்கலைகழகத்தை இணைத்ததில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயரளவுக்கு தொடங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Tags :