மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவிநீக்கம் செய்யக்கோரி 118 மக்களவை உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவிநீக்கம் செய்யக்கோரி 118 மக்களவை உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். .மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இதர உறுப்பினர்களை பேச அனுமதிக்காதது ,ஒரு தலைவட்சமாக செயல்படுவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 94 சிபடி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தன் மீதான இந்த தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படும் வரை தார்மீக அடிப்படையில் அவை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க போவதில்லை என்று ஓம் பில்லா தெரிவித்துள்ளார் .இந்த நோட்டீசை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களவைச் செயலளருக்கு அவர் உத்தரவுவிட்டுள்ளார். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகள் இதில் கையெழுத்துட்டுள்ளனர். இருப்பினும், திாிமுணால் காங்கிரஸ் எம்பிக்கள் இதில் கையெழுத்திடவில்லை. இந்த தீர்மானம் குறித்த விவாதம் வரும் மாா்ச் ஒன்பதாம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :



















