காஷ்மீர் ஆப்பிள், விவசாயம் ,ஜவுளி துறைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட காரணமாகி உள்ளன.
அமெரிக்க மற்றும் வங்கதேசங்களில் சமீபத்தில் கையெழுத்தான வர்த்தகம் ஒப்பந்தத்தால் இந்தியாவின் முக்கிய தொழில்களாக கருதப்படும் காஷ்மீர் ஆப்பிள், விவசாயம் ,ஜவுளி துறைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட காரணமாகி உள்ளன. அமெரிக்காவின் ஒப்பந்தத்தின் படி அமெரிக்க பருத்தியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வங்கதேசம் ஜவுளி பொருள்களுக்கு அமெரிக்கா வரியை குறைக்கும் என இந்திய வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கதேசம் தனது ஜவுளி தேவைக்காக இதுவரை பெரும் அளவு இந்திய பருத்தியையே நம்பி இருந்தது. புதிய ஒப்பந்தத்தால் இந்தியாவின் பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாகவும் மலிவான அமெரிக்க ஆப்பிள்கள் சந்தைக்கு வரும்போது காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச ஆப்பிள்களுக்கான விலை வீழ்ச்சி அடையும் என்றும் கவலை அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஒப்பந்தம்நம் விவசாயிகளுக்கு எந்த வித நன்மை விளைவிக்காது என்றும் இது மாநிலத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தோட்டக்கலை துறையை பாதிக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags :



















