அஜித்குமார் கொலை: காவலர்களிடம் விசாரணை நடத்த அனுமதி

by Editor / 05-08-2025 02:40:44pm
அஜித்குமார் கொலை: காவலர்களிடம் விசாரணை நடத்த அனுமதி

சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைதான காவலர்களை 2 நாட்கள் விசாரணை செய்ய சிபிஐக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கைதான 5 தனிப்படை காவலர்களை, விசாரணைக்கு எடுக்க சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நகை திருட்டு புகாரின் பேரில் கடந்த ஜூன் மாதம் காவலர்களின் கஸ்டடியில் இருந்த அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

 

Tags :

Share via