ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று (ஆக.05) தனது 79வது வயதில் காலமானார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. இவர் 2018- 19 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்தார். கடைசியாக மேகாலயா ஆளுநராக 2022 அக்டோபர் மாதம் வரை பணியாற்றினார். சத்யபால் மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags :