ஆணவக்கொலை.. 8 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

by Editor / 05-08-2025 02:49:50pm
ஆணவக்கொலை.. 8 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. காந்திமதி நாதன் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில் நீதிபதிகள், "இந்த வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எந்த விசாரணையும் தேவையில்லை. விசாரணை பாரபட்சம் இல்லாமல் நடைபெற வேண்டும்" என உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via