உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு..

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் உள்ள கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அங்கு கடந்த சில தினங்களாக மழை பெய்துவரும் நிலையில், இன்று தாராலியில் உள்ள கீர் கங்காவில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள், பெரிய கட்டடங்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன. மேக வெடிப்பு காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
Tags :