திமுக கூட்டணியில் 9 சீட் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா

திமுக கூட்டணியில் 9 சீட் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில், 12 சீட் கேட்டு, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் அடம் பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை தருவதாக முதல்வர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், 12 தொகுதிகள் வேண்டும் என்பதில் பிரேமலதா பிடிவாதமாக இருந்ததால், அடுத்த சந்திப்பில் தொடர்ந்து பேசலாம் என கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Tags :