இளைஞரின் செல்போனை உடைத்து  கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்

by Editor / 23-05-2021 05:13:47pm
 இளைஞரின் செல்போனை உடைத்து  கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்


சத்தீஷ்கரில் மருந்து வாங்கச் சென்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரும் காவலர்களும் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சட்டிஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவரது வாகனத்தை மடக்க, வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவர் மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்து கன்னத்தில் வேகமாக அறைந்தார்.
மருந்து சீட்டை இளைஞர் காண்பித்தும் ஆட்சியர் ஏற்காமல் காவலர்களை அழைத்து இளைஞரை கவனிக்கச் சொன்னதும், லத்தியால் இளைஞரை காவலர்கள் தாக்குகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறையினர், சாலை விதிமீறி வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகக் கூறி இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறினர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில்,இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞனிடம் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், கராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மாவை இடமாற்றம் செய்து, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via