புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:  அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

by Editor / 23-05-2021 05:09:32pm
 புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:  அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை



புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வெப்பநிலை காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக வலுப்பெற்று வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த தாழ்வு நிலை  புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், யாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல், நாளை இரவே அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 26ஆம் தேதி ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இடையில் யாஸ் புயல் கரையை கடக்கும் அல்லது லேசாக திசை மாறி வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதிகள், மூத்த அரசு அதிகாரிகள், தொலைத் தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து, புவியியல் அமைச்சகங்களின் செயலாளர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

 

Tags :

Share via