இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 41 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

by Editor / 22-01-2025 07:15:10am
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 41 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 41 மீனவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இங்கிருந்து, அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.செப்டம்பர் 8 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டனர். அதேபோல், டிசம்பர் 8 ஆம் தேதி, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.

 

Tags : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 41 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

Share via