குவைத் பாலைவனத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த  கடலூர் டிரைவர்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாப பலி:

by Editor / 22-01-2025 07:34:57am
குவைத் பாலைவனத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த  கடலூர் டிரைவர்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாப பலி:

 கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் முஹம்மது ஜூனைத் (45), முஹம்மது யாசின்(30). இருவரும் குவைத் நாட்டில் டிரைவராக இருந்தனர். இதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த கவுஸ் பாஷா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அல்தாப்  என 4 பேரும் சேர்ந்து, குவைத் நாட்டில் வேலை நிமித்தமாக  ஓபரா என்கின்ற பாலைவனப் பகுதியில் கடந்த 18ம் தேதி ஒரு தற்காலிக குடியிருப்பில் தங்கியிருந்தனர்.அதிககுளிர் காரணமாக வாகத் எனப்படும் பொருளைக்கொண்டு அறைக்கு வெளியே தீமூட்டியுள்ளனர்.பின்னர் அந்த தீ மூட்டியை  அதை எடுத்துக்கொண்டு அறையிலேயே வைத்துவிட்டு இரவு உறங்கச் சென்றுள்ளனர். காலை இவர்கள் யாரும் வெளியே வராத நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அச்சமடைந்து உடனடியாக அது கதவை திறந்து பார்த்தபோது இதில் நான்கு பெரும் மயங்கி விழுந்துள்ளனர் அருகில் சென்றுபார்த்தபோது சுனைத்,யாசின்,  அல்தாபு  ஆகிய 3 பேர்களும் இறந்தது தெரியவந்தது,உயிருக்கு போராடிய சுனைத்பாஷா ஹெலிகாப்ட்டர் மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்ட்டு வருகிறது.உயிரிழந்தவர்களது உடல்களை சொந்தஊருக்கு கொண்டுவருவதற்கான முயற்சிநடைபெற்றுவருகிறது.இந்தசம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : குவைத் பாலைவனத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்த  கடலூர் டிரைவர்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாப பலி:

Share via