மூன்று மாத காலமாக அலைந்தும் தீர்வு எட்டப்படவில்லை கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்தில் கதறிய பெண்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கினர் இந்த நிலையில் சங்கரன் கோவில் பகுதியைச் சார்ந்த அன்புகரசி என்கின்ற பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் தனது வீட்டை ஒட்டி உள்ள காலி நிலத்தை அளப்பதற்கு கடந்த மூன்று மாத காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் 8 வாரமாக மனு அளித்து வருவதாகவும் தனக்கு தீர்வு இதுவரை எட்டப்படவில்லை என்று கூறி மனு அளித்தார் அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெற்று கூட்டத்தில் மாவட்ட நில அளவை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது அந்த அதிகாரியிடம் அந்த பெண் கண்ணீர் மல்க தனக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று தனக்கு நியாயமான தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துக் அழுத காட்சி கூட்ட அரங்கில் கலந்து கொண்டோர் மத்தியில் அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் அணி அளிக்கும் மனுக்கள் தாமதமான நடவடிக்கைகள் இருந்தாலும் மகிழ்ச்சி அடைவார்கள் ஆனால் நடவடிக்கையே இல்லை என்கிற பொழுது கண்ணீர் வடிக்கத்தான் செய்வார்கள் என அங்கிருந்து அவர்கள் பேசிக் கொண்டனர்.
Tags : கலெக்டர் அலுவலகத்தில் கதறிய பெண்.