ஒருதலைக் காதல் - மாணவிக்கு கத்திக் குத்து

காதலை ஏற்க மறுத்த மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை நேத்தப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை 3 ஆண்டுகளாக கவியரசு என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், காதலிக்க மறுத்ததால் கல்லூரி சென்று திரும்பிய மாணவியை நேற்று தந்தை கண் முன்னே கவியரசு கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவியரசுவை போலீசார் கைது செய்தனர்.
Tags :