தந்தையை சந்திக்க தைலாபுரம் நோக்கி செல்லும் அன்புமணி..? 

by Editor / 29-12-2024 11:59:02am
தந்தையை சந்திக்க தைலாபுரம் நோக்கி செல்லும் அன்புமணி..? 

புதுச்சேரியில் நேற்று நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் பா.ம.க இளைஞரணி தலைவராக அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தன்னை நியமிக்க அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்து 4 மாதம்  பதவி எதற்கு?என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது விருப்பம் இல்லை என்றால் விலகிக் கொள்ளலாம் என்று அன்புமணியை பகிரங்கமாக  எச்சரித்து இருந்தார் ராமதாஸ் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய அன்புமணி தன்னை சந்திக்க வருபவர்கள் பனையூரிலுள்ள தனது அலுவலகத்திற்கு வரலாம் என்று ஆவேசமாக தெரிவித்து வெளியேறினார்.அன்புமணி,இந்தநிலையில் 2026 சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்த கருத்துமோதல்கள் கட்சியினுடைய வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் ஜி.கே மணி உள்ளிட்டோர் இருவரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று சந்திப்பு நடைபெறுகிறது.தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாசை சந்திப்பதற்காக அன்புமணி ராமதாஸ் பனையூரில் உள்ள தமது இல்லத்தில் இருந்து தைலாபுரம் செல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags : தந்தையை சந்திக்க தைலாபுரம் நோக்கி செல்லும் அன்புமணி..? 

Share via