சந்திரயான்-3 விண்கலம் இன்று நிலவின் வட்டப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கும். 

by Editor / 01-08-2023 06:59:24am
சந்திரயான்-3 விண்கலம் இன்று நிலவின் வட்டப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கும். 

நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, இன்று ஆக 1- ம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியா நிலவுக்கு அனுப்பிய மூன்றாவது அறிவியல் செயற்கைகோள் சந்திராயன் 3.

இது புரொபல்சன் உந்து இன்ஜின்கள், லேண்டர், ரோவர் என்று மூன்று பகுதிகளை கொண்டது.
 கடந்த ஜூலை 14 ல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திராயன் 3, ஆகஸ்ட் 23 ல் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்திராயனை பூமியின் நீள்வட்ட பாதையில் இருந்து, தரையில் இருந்து 3 லட்சத்து 90 ஆயிரம் கி.மீ., துாரத்தில் உள்ள நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் பணி கட்டம் கட்டமாக நடந்து வருகிறது.

அடுத்த மிக முக்கிய பயணமாக நள்ளிரவு (ஆக.01) ல் புவி வட்டப் பாதையிலிருந்து, நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திரயான் நுழைய 28 முதல் 31 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1.2 லட்சம் கிலோ மீட்டர் திட்டமிட்டபடி ஆக. 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via