விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாதபட்டியில் சக்தி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு, திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கிருந்த ஆறு அறைகளும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலையில், ஆலையில் சிக்கிய தொழிலாளிகளை தீயணைப்புத் துறையினர், மீட்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :