கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

by Editor / 17-07-2024 11:42:58am
கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாருக்கு பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார் வந்ததை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பெயரில் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்களை கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராஜ் தீபன் குமார்,  மற்றும்  போலீசார் கடையநல்லூர் வழியாக  கேரளாவுக்கு செல்லும் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட  டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதில் லாரியின் ஓரங்களில் கோழி தீவனங்களை வைத்துவிட்டு லாரியின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான மூடைகளில்   ரேஷன் அரிசி மூடைகளை மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த   குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு போலீசார் தற்போது குடிமை பொருள் அதிகாரிகள் டாரஸ் லாடியிலிருந்து 12 டன் மூளைகளை கணக்கெடுத்து அதில் கோழி தீவனம் எவ்வளவு உள்ளது ரேஷன் அரிசி எவ்வளவு உள்ளது என கணக்கெடுத்து வருகின்றனர் 

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம்  விளவங்கோடு தாலுகா வேம்புவிளை பாலப்பள்ளம் என்ற ஊரைச் சேர்ந்த புஷ்ப தாஸ் மகன் அசோக் 34  என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை கடத்தி தொடர்ச்சியாகரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும்      நபரையும் மற்றும் லாரியின் உரிமையாளரையும்போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags : கடையநல்லூர்  வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Share via

More stories