2 ஆண்டுகளுக்குப்பின்னர் ஆடிபெருக்கு கோலாகல கொண்டாட்டம்

by Editor / 03-08-2022 10:01:53am
2 ஆண்டுகளுக்குப்பின்னர் ஆடிபெருக்கு கோலாகல  கொண்டாட்டம்

தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்றங்கரைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆடி பதினெட்டாம் நாளன்று, பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரளும் டெல்டா மாவட்ட மக்கள், பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபடுவது வழக்கம். மேலும் ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விடுவர். காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புடன் பொதுமக்கள் அங்கு நீராடி வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள காவிரி கரையில் புதுமண தம்பதிகள் வழிபாடு செய்து வருகின்றனர். கொரானா காரணமாக, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக படித்துறைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Tags : After 2 years, Aadiperu has a big celebration

Share via