பாம்பை கடிக்க விட்டு மூதாட்டியை கொன்ற பேரன்

by Staff / 25-02-2024 01:37:30pm
பாம்பை கடிக்க விட்டு மூதாட்டியை கொன்ற பேரன்

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில், கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற பேராசையில் இளைஞர், தனது பாட்டிக்கு காப்பீடு செய்து, பின்னர் பாம்பை கடிக்க விட்டு கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ராணி பதரியா என்ற மூதாட்டியின் பெயரில், அவரது பேரன் ஆகாஷ் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். 8 மாதங்களுக்கு முன்பு பாம்பாட்டிக்கு ரூ.30,000 கொடுத்து, அழைத்து வந்து மூதாட்டியை கடிக்க வைத்து கொன்றுள்ளார். தொடர்ந்து, பாம்பு கடித்து இறந்ததாக பேரன் ஊரையே நம்பவைத்துள்ளார்.

காப்பீட்டுத் தொகையான ரூ.1 கோடியை பெற்று ஏஜென்டுடன் சேர்ந்து நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகாஷின் நடத்தையில் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்தது. ஆகாஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories