கால்களை நனைத்தவர்களை இழுத்துச்சென்ற கடலலை 

by Editor / 22-05-2023 09:22:35am
கால்களை நனைத்தவர்களை இழுத்துச்சென்ற கடலலை 

 கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோடை விடுமுறையை முன்னிட்டு நேற்று நாகர்கோவிலை சேர்ந்த வியாபாரி ஒருவர் குடும்பத்துடன் மண்டைக்காடு கோயில் வந்தார். உடன் அவரது கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களும் வந்திருந்தனர். கோயிலில் சாமி தரிசனம் முடிந்து அவர்கள் கடற்கரைக்கு சென்றனர். கடலில் கால்களை  நனைத்து கொண்டிருக்கும் போது 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுவனை கடல் அலை இழுத்து சென்றது. உடனே புதூர் மீனவர்கள் கடலில் குதித்து அனைவரையும் மீட்டனர். கடலில் தத்தளித்த 4 பேரையும் தக்க நேரத்தில் கடலில் குதித்து காப்பாற்றிய புதூர் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

 

Tags :

Share via