போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை-அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழகத்தில் போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்
பத்திரிக்கையாளர் நலவாரியம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் நல வாழ்விற்கான பணிகள் தொடங்கும். அதேபோல் இந்த வாரியம் மூலம் போலி பத்திரிக்கையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை போன்றவை வழங்குவது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது சம்பந்தமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தத் துறை சார்ந்த அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
அதே போல் அந்த மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அதேபோல சங்கங்கள் நிறைய இருப்பதால் அதிலும் சில குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். சில பத்திரிகை சங்கங்களின் உறுப்பினர்கள் ஒரே உறுப்பினர் அனைத்து சங்கங்களிலும் இருந்து வருகின்றனர் இதையும் ஆய்வு செய்தபிறகு முடிவெடுத்து கொடுக்கப்படும் என்றார்அமைச்சர் சாமிநாதன்
Tags :