காய்கறி மார்க்கெட்டில் கிலோ 100-ஐ தாண்டி விற்பனையான முருங்கைக்காய்.

by Editor / 18-06-2024 10:00:52am
 காய்கறி மார்க்கெட்டில் கிலோ 100-ஐ தாண்டி விற்பனையான முருங்கைக்காய்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டாகும் இந்த மார்க்கெட்டிற்கு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனையாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரள மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி ஆவது வழக்கம். இதனால் தினமும் ஐந்து முதல் ஆறு கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் காய்கறிகளின்  வரவு குறைந்ததால் தொடர்ந்து விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.  

இந்நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்று வந்த முருங்கக்காய் முற்றிலும் வரவு குறைந்ததால் அதன் விலை படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் இன்று ஒரு கிலோ மொத்த ரூபாயில் 90 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 120 ரூபாய்க்கும் விற்பனையானது. 

இந்த விலை உயர்வுக்கு காரணம் வெளி மாநிலமான குஜராத் மாநிலம் பரோடா மற்றும் தமிழ்நாட்டின் உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரவு இல்லாதாலும் உள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையினால்  பூக்களும் பிஞ்சுகளும் உதிர்ந்ததால் உற்பத்தி முற்றிலும் குறைந்ததால் 500 கிலோ கொண்டு வரும் ஒரு விவசாயி தற்போது ஐந்து முதல் பத்து கிலோ முருங்கைக்காய் கொண்டு வருவதால் இந்த விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

இந்த விளைவு உயர்வால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி இல்லை என்ற போதிலும் வியாபாரிகளுக்கு தேவையான அளவு முருங்கைக்காய் கொடுக்க முடியாத சூழ்நிலை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கடை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் தொடர்ந்து 15 தினங்களுக்கு மேல் நீடிக்கும் என்றும் தமிழ்நாடு நாட்டில் உள்ள உடன்குடி பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் இதன் விலை தொடர்ந்து இன்னும் உயர வாய்ப்புள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Tags : கிலோ 100-ஐ தாண்டி விற்பனையான முருங்கைக்காய்.

Share via