ஜே.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரி இணைந்து ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்
தென்காசி ஜே.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக்கல்லூரி இணைந்து ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் ஒதுக்கப்பட்ட மக்களின் இலக்கியம் மற்றும் பண்பாடு என்னும் தலைப்பில் ஜே. பி கலை அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறை தலைவர் குரூஸ் திவாகரன் வரவேற்று பேசினார். கல்லூரி நிர்வாகி அருட் சகோதரி ஹேம்லெட், கல்லூரி முதல்வர் முனைவர் மைக்கேல் மரியதாஸ், மனோ கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் ரஞ்சித் குமார் முன்னிலையில் நடைபெற்றது. 13 கல்லூரிகளை சேர்ந்த 306 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 76 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கேரளா எம்.எம்.என்.எஸ். எஸ். கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கிஷோர் ராம் ஒதுக்கப்பட்ட மக்களின் இலக்கியங்களையும்,இன்றைய திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் எனவும், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியின் ஆங்கில த்துறை பேராசிரியர் முனைவர் ரத்தினபிரபு ஒதுக்கப்பட்ட மக்களின் இலக்கியங்களின் வரலாறும் அதன் வகைகளை பற்றியும், பெங்களூரு கிறிஸ்து ஜெயந்த் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் சோபவியா சபையர் ஒதுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் மற்றும் இலக்கியத்தில் உள்ள மக்களின் பண்பாடு குறித்து பேசினார். இவ்விழாவின் நிறைவில் ஆங்கிலத்துறை பேராசிரியர் கருப்பசாமி நன்றியுரை வழங்கினார்.
Tags :