வெடித்து சிதறிய வீடு.. 5பேர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இன்று (செவ்வாய்கிழமை) பயங்கர விபத்து நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லோஹியாநகரில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் தீபக் மீனா, இந்த வீட்டில் சோப்பு தயாரித்தல் மற்றும் பேக்கேஜிங் செய்யப்பட்டதாகவும், ஆனால் எப்படி வெடித்தது என்பது தெரியவில்லை என தெரிவித்தார்.
Tags :













.jpg)


.jpg)

.jpg)
