குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு புரோக்கர் கைது

by Staff / 17-10-2023 02:24:16pm
குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு புரோக்கர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில், அரசு பெண் மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இன்று குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாமணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதி ஒருவரின் பெண் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு வாங்க இந்த கும்பல் முயற்சி செய்தது. இது பற்றி குழந்தையின் பெற்றோர் ஆட்சியர் மற்றும் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

 

Tags :

Share via

More stories