தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 .01. 2026மாலை 6:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

by Admin / 14-01-2026 01:38:19am
 தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 .01. 2026மாலை 6:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் 2026 இல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்சிகள் தங்களுடைய கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி நிலவரங்களை குறித்து கேட்டு அறிவதோடு வெற்றிக்கான உத்திகளை வகுப்பதற்கான வழிமுறைகளை வழங்குகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் தம் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முகமாக பல்வேறு விதமான மாநாடுகளை நடத்திக் கொண்டிருப்பதோடு கழக நிர்வாகிகளை தனித்தனியாக பேசி வருகின்றன. அந்த வகையில் அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 .01. 2026, செவ்வாய்க்கிழமை, மாலை 6:30 மணி அளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பு செய்துள்ளார்.

 தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 .01. 2026மாலை 6:30 மணி அளவில் நடைபெற உள்ளது.
 
Tags :

Share via

More stories