அண்ணா எழுதிய ஓர் இரவு படம்தான் ப நீலகண்டன் இயக்கிய முதல் படம்
ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 - 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். இவர் 2 அக்டோபர் 1916 அன்று தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் பிறந்தார். 1947இல் இவருடைய நாம் இருவர் நாடகத்தினை அவிச்சி மெய்யப்பச் செட்டியார் திரைப்படமாக எடுத்தார். 1948இல் வேதாள உலகம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். 1951இல் ஓர் இரவு திரைப்படத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றினார். இத்திரைப்படத்திற்கு வசனத்தினை அண்ணாதுரை எழுதினார்.
ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் அம்பிகாபதி (1957) மற்றும் திருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் ஆசுதான இயக்குனர் என்று புகழப்பட்டார்.
இவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கி படமாக எடுத்தார். அதற்கு ப நீலகண்டன் வசனம் எழுதினார். தொடர்ந்து வேதாள உலகம், வாழ்க்கை போன்ற ஏவிஎம் படங்களுக்கு வசனங்கள் எழுதினார். அறிஞர் அண்ணா எழுதிய ஓர் இரவு படம்தான் ப நீலகண்டன் இயக்கிய முதல் படம். புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்ஜிஆரை வைத்து அதிகப் படங்கள் (17) இயக்கியவர் ப நீலகண்டன். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவருக்கு பக்கபலமாக இருந்தார். அந்த நன்றியை மறக்காமல் படத்தின் டைட்டிலில் குறிப்பிட்டிருப்பார் எம்ஜிஆர்.
1965 முதல் 1978 வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களை மட்டுமே இயக்கினார் ப நீலகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :