பெண்களைக் கண்டு அகிலம் வியக்கிறது வைகோ

by Staff / 07-03-2023 02:28:09pm
பெண்களைக் கண்டு அகிலம் வியக்கிறது வைகோ

21ஆம் நூற்றாண்டு கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறி பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சர்வதேச உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, வைகோ மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் இனத்தின் வரலாற்றில் பெண்கள் உன்னதமான மதிப்பை பெற்றிருக்கிறார்கள். உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் பெண்கள் நலனுக்காக 9 மாத பேறுகால விடுமுறை, 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது திமுக அரசின் சாதனை என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via