மேகாலயா நாகாலாந்து முதல்வர்கள் பதவியேற்பு

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் புதிய அரசுகள் இன்று பதவியேற்கின்றன. தேசிய மக்கள் கட்சி (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மா மேகாலயா முதல்வராகவும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைவர் நைபு ரியோ நாகாலாந்து முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் இந்திய பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாளை திரிபுரா மாநில முதலமைச்சராக பாஜகவின் மாணிக் சாகா நாளை 2வது முறையாக பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Tags :