மதுரையில்  இடி மின்னலுடன் கனமழை முகப்பு விளக்கை எரிய விட்டு சென்ற வாகனங்கள்.

by Staff / 10-08-2025 06:05:48pm
மதுரையில்  இடி மின்னலுடன் கனமழை முகப்பு விளக்கை எரிய விட்டு சென்ற வாகனங்கள்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய,  மழை பெய்யக்கூடும். என் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரையில் பகலில் சுள்ளென்று வெயில் அடித்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய துவங்கியது. 
மதுரை மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை, விரகனூர், புதூர், மூன்று மாவடி, சர்வேயர் காலனி சிம்மக்கல், கோரிப்பாளையம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கியது.


அதேபோன்று புறநகர் பகுதிகளான அழகர் கோவில் கள்ளந்திரி மூன்றுமாவடி சிலைமான் விமான நிலையம் திருநகர் திருப்பரங்குன்றம் ஆவியூர் பாரப்பத்தி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.
 
 திடீரென பெய்த கன  மழையால் சாலைகளில் புலம்பல் மழை நீர் தேங்கியது. நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. 
 காமராஜர் சாலை சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பெய்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

 

Tags : மதுரையில்  இடி மின்னலுடன் கனமழை முகப்பு விளக்கை எரிய விட்டு சென்ற வாகனங்கள்.

Share via