ஒரே பெண்ணை மணந்த அண்ணன், தம்பி.

இமாச்சல பிரதேச ஷில்லாய் கிராமத்தில், ஹட்டி இனத்தை சேர்ந்த பிரதீப் மற்றும் கபில் என்ற சகோதரர்கள் இருவரும் சுனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். இதை பலரும் விமர்சனம் செய்திருந்த நிலையில், 'இது நூற்றாண்டுகளாக நடைபெறும் பாரம்பரியம் என்றும், குடும்பமும் மணமகளும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்றும் அந்த சகோதரர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், மணமகள் சுனிதா 'யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை' இது தனது விருப்ப தீர்மானம் என கூறியுள்ளார்.காலம் கலிகாலம் என்பார்களே அதுதான் இதுவா...
Tags : ஒரே பெண்ணை மணந்த அண்ணன், தம்பி.