வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்க யாருக்கும் உரிமை இல்லை-தேர்தல் ஆணையம் திட்டவட்டம்.

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவோ அல்லது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறவோ சட்டத்தில் இடமில்லை பீகாரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களைச் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைத் தர சட்டத்தில் இடமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், எந்தவொரு வாக்காளர் பெயரும் நீக்கப்படாது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
Tags : வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்க யாருக்கும் உரிமை இல்லை-தேர்தல் ஆணையம் திட்டவட்டம்.