அருவிகளின் ஒசையில் அருள் பாலிக்கும் ஒளவையார் கோவில்

by Admin / 20-07-2022 10:55:39am
அருவிகளின் ஒசையில் அருள் பாலிக்கும் ஒளவையார் கோவில்

திருநெல்வேலி-தென்காசி  மாவட்டங்களில்  ஒளவையார் வழிபாடு   பெண்களின் , தாய்மார்களின் வழிபாடுகளில்முக்கியமான   வழிபாடாகும்.இவ்வழிபாடு  இரவு நேரங்களில் பெண்களால் மேற்கொள்ளப்பட்ட  வழிபாடாகும்.இன்று இவ்வழிபாடு   நடக்கிறதா என்று தெரியவில்லை.இது பெரும்பாலும்  ஒரே சமூகத்து  பெண்களின்  உறவு பெண்கள் மட்டுமே  கூடி நடத்தப்பெறும் நிகழ்வாகும் . இதற்காக ஒரு  வாரமாக  திருவையில்  பச்சை  அரிசியை மாவாகத்திரிப்பர். வீட்டின் முற்றத்தில்  கூடி அரட்டை  அடித்தபடி  பச்சரிசி மாவு திரிக்கப்படும்  கோலாகலமான பொழுதுகள். கூட்டுக் குடும்பத்தின்  இனிமையை  சந்தோஷத்தை  புலப்படுத்தும். ஒரு குறிப்பிட்ட நாளில்  ஒளவையார்  சிலை யார் வீட்டில்  இருக்கிறதோ...அந்த வீட்டில் ஒளவையார் பூஜை நடக்கும் .அந்த  வீட்டில்  அன்று  எந்த  ஆண்களும்  தாங்கக்கூடாது. அது அவர்களுக்கு ஆகாது.   ஒளவையாருக்கு நடக்கு ம்  ராக்கால  பூஜை மச்சுலே (மாடி) தான் நடக்கும்  கல்யாணம் ஆகாத பெண்கள் சுமங்கலிகள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். பச்சரிசி மாவு, ஐந்துக்கு மேற்பட்ட தேங்காய்.,வழக்கமான பூஜைபொருட்களுடன் பூஜை நடத்த செல்வர். பச்சரிசி மாவை பதமாகப்பிசைந்து இட்லி கொப்பரையில் ,கையில் வைத்துபிடி கொழுக்கட்டையாகப் பிடித்து  அவிப்பர்.பின்னர் தேங்காய்களை உடைத்து சில்லு சில்லுகளாக கீறி எடுத்து வைப்பர்.பின் நடுநிசியில் பூஜை செய்து  கோழி கூவிய ..பின்பு அவரவர் வீட்டிற்குச்சென்ற பின்பு...பூஜை முடித்து அவரவர் வீட்டற்கு எடுத்துச்சென்ற தகாழுக்கட்டை ,தேங்காய் சில்லுகளோடு   ..பூஜகை்கு வராத சொந்த பந்த பெண்களுக்கு வீடு வீடாக கொண்டு சென்று கொடுப்பவர்.இனிப்பும் உப்புமில்லாத அந்த கொழுக்கட்டைகளைஆண்கள் பார்த்தால் கண் குருடாகிவிடும்.சாப்பிட்டால் உடல் நல கோளாறு வரும் என்று சொல்லி வைத்திருந்தார்கள்.இந்த ஒளவையார்..?எந்த பெண் தெய்வத்தின் மாற்றுப்பெயர்..இல்லை..சங்க கால பெண் புலவருக்கு நடத்தும் வழிபாடா,..இது வரை எந்த ஆய்வாளரும்  ஒளவை வழிபாட்டை குறிப்பிடவில்லை.ஐம்பது  ஆண்டுகளுக்கு  முன்னால் பெண்கள்  வயதிற்கு வந்து விட்டால் சுதந்திரமாக வெளியில்  வரமுடியாது.கருக்கல் பொழுதிலும் காத்தால சூரிய  உதயத்திற்கு முன்னால் உறவுகளை சந்திப்பதோ..கிணற்றில் நீர் இறைக்க செல்வதற்கோ அனுமதி.மற்றபடி சமஞ்ச பெண்கள் வெளியில் செல்லக்கூடாது .அனுமதிக்க மாட்டார்கள். திருமணம் ஆன பின்பு புருசனோடு தான் செல்ல வேண்டும். திருமணம் ஆன பெண்கள் கூட  கணவன்,உறவினர் துணையின்றி  செல்லக்கூடாது.இப்படியான வாழ்வியலை கொண்ட  பெண்கள் கூடி இரவு நடுநிசியில் உப்பும்  இனிப்பும்ன்றியான ஒரு கொழுக்கை செய்த வழிபாடு  செய்தது .ஏன் ?
என்கிற  கேள்வி  எழுகிறது .ஒருவேளை பெண்களுக்கான விசயங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த  வழிபாடு நடத்தப்பட்டிருக்கலாய் என்று தோன்றுகிறது. இப்பொழுது ஒளவையார் வழிபாடு முற்றிலும்  மறைந்து போய் விட்டது கன்னியாக்குமரியில் மட்டும் ஒரு ஒளவையார் கோவில் பெண்களால்  வழிபாடு  செய்யப்பெறும்  கோவில் உள்ளது. யாரும்  அதிகம் அறியாத குற்றால மலையில் செண்பக தேவி அருவி விழும் பாறையில் ஓர் ஒளவையார் குகை கோவில்உள்ளது.அதை ஒளவையார் கோவில் என்று இன்று யாருக்கேனும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒளவையார் வழிபாடு பெண்கள் இன்று போல் வெளியே வராத பொழுது  கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் திருமணம் விரைவில் நடக்கவும் தாலி பாக்கியம் நிலைக்க நடத்தப்ட்ட வழிபாடு என்றே கொள்ளலாம்.

அருவிகளின் ஒசையில் அருள் பாலிக்கும் ஒளவையார் கோவில்
 

Tags :

Share via