தியாகதுருகம் வனச்சரக அலுவலகத்தில் ரூ.3.10 லட்சம் பணம் பறிமுதல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாவந்துார் காட்டுகொட்டகை பகுதியில் தியாகதுருகம் வனச்சரக அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் அலுவலர்கள், வன குத்தகைதாரர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வனவர் செந்தில்குமார், 52; என்பவரை சோதனை செய்த போது, கணக்கில் வராத 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தது தெரியவந்தது.தொடர்ந்து, அலுவலகத்தில் சோதனை செய்து, செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : தியாகதுருகம் வனச்சரக அலுவலகத்தில், கணக்கில் வராத பணம் 3.10 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.