: 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்த வனத்துறை
திண்டுக்கல் மாவட்டம் பழனி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த விலங்குகளை அடிக்கடி வேட்டையாடும் நிகழ்வுகள் அதிகமாக நடந்து வருவதாக புகார் எழுந்தது.இதனை அடுத்து பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காவலபட்டி அருகே கரட்டுப்பாறை வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வேட்டை நாய்களுடன் வனப்பகுதியில் நடமாடினர்.
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் காவலப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, முருகன், தங்கவேல், கிருஷ்ணன், பாலன், கணேசன், அருண் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய 8 பேரிடமிருந்து, வேட்டையாடுவதற்காக வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் 6 வேட்டை நாய்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் வனச்சரகத்தில் பலமுறை வேட்டையாடி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags :