திமுக கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஜால்ரா அடிக்கின்ற கட்சிகளாகவே உள்ளன- நயினார் நாகேந்திரன்.

தமிழக கல்விக் கொள்கையானது, தேசிய கல்வி கொள்கையின் "ஈ அடிச்சான் காப்பியாகவே உள்ளது" - தமிழக பாஜக மாநில தலைவர் கிண்டல்.
தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, பூத் கமிட்டி மாநில மாநாடு தொடர்பாக, ஆலோசனை கூட்டமானது தொகுதிகள் வாரியாக நடைபெற்ற நிலையில், தென்காசி நகரப் பகுதியில் தென்காசி மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பங்கேற்று பல்வேறு அறிவுரைகளை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கிய நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது, பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ராஜகோபுரத்தில் இருந்து கலசம் விழுந்த சம்பவம் அவர்கள் முறையாக பராமரிப்பு பணி செய்யவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இந்த திமுக அரசும் அதேபோல் விரைவில் விழும் என்பதற்கு அறிகுறிதான் இது என பேசிய அவர், திமுக கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஜால்ரா அடிக்கின்ற கட்சிகளாகவே உள்ளன.
பீகார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் 21 லட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள் என்பதால் நீக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் அங்கு இல்லாததால் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த அவர், இதெல்லாம் அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியாமல் இதைப்பற்றி அவர் பேசி வருகிறார்.
மேலும், தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுகவினர் தான், அவர்கள் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை என்பது, தேசிய கல்விக் கொள்கையை அப்படியே காப்பி அடித்த கொள்கையாகவே உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை தவிர மீதமுள்ள 95 சதவீத கருத்துக்கள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் இருந்து எடுக்கப்பட்டது தான்.
மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை அப்படியே ஈ அடிச்சான் காப்பி போல தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையாக இன்றைய தினம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது வேடிக்கையாகவே உள்ளது என பேசினார்.
Tags : திமுக கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஜால்ரா அடிக்கின்ற கட்சிகளாகவே உள்ளன- நயினார் நாகேந்திரன்.