தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்க வைகோவின் பயணம்.

மதிமுக தலைமையகம் சார்பில் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதச்சார்பின்மையை நிலைநிறுத்த மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பிரச்சார கூட்டங்கள் 2025, ஆகஸ்ட் 9 ஆம் நாள் தூத்துக்குடியில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 20 ஆம் நாள் சென்னையில் நிறைவடைகிறது.
2025 ஆகஸ்டு 9, இடம் - தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்
2025 ஆகஸ்டு 10, இடம்: கடையநல்லூர், பொருள்: மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும்
2025 ஆகஸ்டு 11, இடம்: கம்பம், பொருள்: முல்லைப் பெரியாறும்; நியூட்ரினோவும்
2025 ஆகஸ்டு 12, இடம்: திண்டுக்கல், பொருள்: விவசாயிகள், மீனவர்கள் துயரம்
2025 ஆகஸ்டு 13, இடம்: கும்பகோணம், பொருள்: மேகதாதுவும், மீத்தேனும்
2025 ஆகஸ்டு 14, இடம்: நெய்வேலி, பொருள்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
2025 ஆகஸ்டு 18, இடம்: கோவை சூலூர், பொருள்: இந்தி ஏகாதிபத்தியம்
2025 ஆகஸ்டு 20, இடம்: திருவான்மியூர், பொருள்: சமூக நீதியும்; திராவிட இயக்கமும்
அனைத்துக் கூட்டங்களிலும் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் பி.இ., அவர்களும், கவிஞர் மணிவேந்தன் அவர்களும் உரையாற்றுவார்கள்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.08.2025
Tags : தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்க வைகோவின் பயணம்.