வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை: பழனிவேல் தியாகராஜன்

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கையில் உரையாற்றிய அவர், "வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
Tags :