இன்று திமுக எம்பி கூட்டம்

by Staff / 16-09-2023 03:06:07pm
இன்று திமுக எம்பி கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல், ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்துவது, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவை தொகை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 

Tags :

Share via