விவசாயிகளை எதிரிகளைப் போல் கையாளும் பாஜக - அமைச்சர் காட்டம்

by Staff / 15-02-2024 12:21:37pm
விவசாயிகளை எதிரிகளைப் போல் கையாளும் பாஜக - அமைச்சர் காட்டம்

ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது நாடு ஒரு இருண்ட பாதையை நோக்கி நகர்வதை குறிக்கிறது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், பாஜக அரசு விவசாயிகளை நாட்டின் எதிரிகள் போல கையாளுகிறது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம். இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்த்தெழ செய்வோம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo